மாயமான மலேசிய விமானத்தில் இருந்த பயணிகள் மூச்சுத் திணறி இறந்திருக்கக்கூடும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகருக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகக் கூறப்பட்டாலும் இதுவரை ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை குறித்து தேடல் பணிகளை தலைமை தாங்கி நடத்தி வரும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்கள் மூச்சுத் திணறி இறந்திருப்பார்கள் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது
விமானம் கடலில் விழுந்து மூழ்குவதற்கு முன்பே பயணிகள் இறந்திருக்கக்கூடும் என்று ஆஸ்திரேலியா கூறியுள்ளது.
விமானம் கடைசியாக தொடர்பு கொண்ட தகவல்களை வைத்து பார்க்கையில் அது இந்திய பெருங்கடலில் தற்போது தேடப்பட்டு வரும் இடத்தில் இருந்து தெற்கே இன்னும் சிறிது தொலைவில் விழுந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
விமானம் கடலில் விழுந்தபோது அது ஆட்டோ பைலட் மோடில் இருந்தது என்று கூறப்படுகிறது. ஒரு வேளை விமானம் விபத்துக்குள்ளானதற்கு யாராவது காரணம் என்றால் அது கேப்டன் ஜஹாரி அகமது தான் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.