மலேசிய விமானத்தில் குண்டுப்புரளியை ஏற்படுத்திய இலங்கையர் கைது

அவுஸ்ரேலியாவிலிருந்து கோலாலம்பூர் நோக்கிப் பயணித்த மலேசிய விமானத்தில் குண்டுப் புரளியை ஏற்படுத்திய இலங்கையைச் சேர்ந்த பயணி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தம்மிடம் குண்டு இருப்பதாகவும் விமானத்தை வெடிக்கச் செய்யப் போவதாகவும் குறிப்பிட்டுள்ள குறித்த பயணி, விமானியின் அறைக்குள் பிரவேசிக்கவும் முயன்றுள்ளார். இதனால் பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

எனினும், சாமர்த்தியமாக செயற்பட்ட சக பயணிகள் குறித்த பயணியை மடக்கிப் பிடித்து பரிசோதித்ததில், கையடக்க தொலைபேசிகளுக்கு மின் ஏற்றும் உபகரணத்தையே (power bank) அவர் குண்டு எனக் குறிப்பிட்டு புரளியை ஏற்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

Related Posts