மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கோரோனா; அவர் பயணித்த விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்

மலேசியாவிலிருந்து மார்ச் 17ஆம் திகதி நாட்டுக்கு வந்த OD185 இலக்கமுடைய விமானத்தில் வருகை தந்த அனைவரையும் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதியும் கோரனா பரவலைக் கட்டுப்பாட்டுத்தும் செயலணியின் தலைவருமான லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

மலேசியாவிலிருந்து மார்ச் 17ஆம் திகதி நாட்டுக்கு வந்த OD185 இலக்கமுடைய விமானத்தில் வருகை புத்தளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா வரைஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் பதிவுகளை மேற்கொள்வதுடன் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

Related Posts