முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொள்வனவு செய்த பெறுமதிமிக்க மலர்வலயங்கள் தொடர்பிலான நிதி முறைகேடு குறித்த விசாரணைகளை சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் தடுத்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச, பொதுமக்களின் வரிப்பணங்களின் மூலம் பெறுமதி மிக்க மலர்வலயங்களை கொள்வனவு செய்துள்ளார். இதன்போது அவர் மலர்வலயங்களின் பெறுமதியை காட்டிலும் அதிக விற்பனை விலைகளிலேயே அதற்கான ரசீதுகளை பெற்றுள்ளார்.
இது தொடர்பில் சீஐடி விசாரணைகளை முன்னெடுத்துள்ள போதும் அதற்கு சட்டமா அதிபர்திணைக்கள அதிகாரிகள் சிலர் தடை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது