மர்ம மனிதன் : வில்லன், திருநங்கை வேடத்தில் விக்ரம்

இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் மர்ம மனிதன் திரைப்படத்தில் விக்ரம் திருநங்கையாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

vikram11

10 என்றதுக்குள்ள படத்திற்குப் பின்னர் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் மற்றும் திரு ஆகியோரின் படங்களில் விக்ரம் நடித்து வருகிறார்.

இதில் ஆனந்த் ஷங்கர் படத்தில் முதன்முறையாக நயன்தாராவுடன் இணைந்து நடிக்கிறார் விக்ரம். தற்போது தமிழின் முன்னணி நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர்.

மேலும் இதுநாள்வரை விக்ரமுடன் ஜோடி சேர மாட்டேன் என்று கூறிய நயன் இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடிப்பதால் இப்பொழுதே படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவது போல இந்தப் படத்தில் விக்ரம் 2 வேடங்களில் நடிக்கிறார், என்றும் அதில் ஒரு விக்ரம் வில்லனாக நடிப்பதாகவும் கூறுகின்றனர்.

இதில் மற்றொரு ஆச்சரியம் அந்த வில்லன் கதாபாத்திரம் பெண் தன்மை கொண்ட திருநங்கை வேடம் என்பதுதான். வித்தியாசமான வேடங்களில் நடிப்பது விக்ரமிற்கு புதிதல்ல என்றாலும், இந்த வில்லன் வேடத்தில் விக்ரம் என்ன புதுமை காட்டப் போகிறார் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Related Posts