உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்ய கடற்படை தளபதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய கடற்படை தளபதியான ஸ்டானிஸ்லாவ் (Stanislav Rzhitsky, 42) என்பவரே வெளியில் சென்றபோது மர்ம நபர் ஒருவரால் கொல்லப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், ஸ்டானிஸ்லா கொலை தொடர்பில் நீல நிற தொப்பி அணிந்த நடுத்தர வயது ஆண் ஒருவரை தேடிவருவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், உக்ரைன் நகர் மீது ஏவுகணை தாக்குதலை நடத்துமாறு ஸ்டானிஸ்லாவ் உத்தரவிட்ட நிலையில், தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில், நான்கு வயதுக் குழந்தையான லிஸாவை (Liza Dmitrieva) பலி கொடுத்தமை யாராலும் மறக்கமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளனார்.