மர்மமான முறையில் சிறுமி கொலை

மஹியங்கனை – ரிதிமாலியெத்த  – மோரான பிரதேசத்தில் 9 வயதான மாணவியொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பி கொண்டிருந்த போதே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பாடசாலையில் இருந்து 2.5 கிலோ மீற்றர் தூரம் அளவில் இவரின் வீடு உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனோடு அவர் செல்லும் பாதை ஆள் நடமாட்டமில்லாத பிரதேசம் என்பதால் கொலை செய்வதற்கு முன்னர் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு ஏதும் உட்படுத்தப்பட்டுள்ளாரா என விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மஹியங்கனை காவற்துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் சடலம் தொடர்பான பிரேதபரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

Related Posts