மருந்து உறையில் அரசியல்வாதியின் பெயர்: கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, பருத்தித்துறை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசியல்வாதியொருவரின் பெயர் அச்சிடப்பட்ட மாத்திரை உறைகள் வைத்தியசாலையொன்றுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு, அதில் மருந்து விநியோகிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த உறையில், அன்பளிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் இளைஞர் அணி என அச்சிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts