மருந்தகத்திற்குள் நடந்த மரணச் சடங்கு! விசாரணைகளை ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் மரண சடங்கு இடம்பெற்றமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் , கந்தர்மடம் பகுதியில் வீடொன்றில் மருந்தகம் ஒன்று நடத்தப்பட்டு வந்தது. வீட்டின் முன் பாகத்தினை மருந்தகமாக மாற்றி , அதனை பதிவு செய்து நடாத்தி வந்துள்ளனர்.

வீட்டின் மற்றைய பாகத்தில் குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் குறித்த வீட்டில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

அவரது உடலம் வீட்டில் இரு தினங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்து, இறுதி கிரியைகள் நடைபெற்றது. மருந்தகமாக பதிவு செய்யப்பட்டுள்ள வீட்டில் மரண சடங்கு இடம்பெற்றமை தொடர்பில்

உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts