இந்தியாவில் மருத்துவ கல்வியை தொடர தடைவிதிக்கப்பட்ட ஈழ அகதி நந்தினிக்கு சீனா பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்துள்ளது.
1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகத்துக்கு அகதியாக குடும்பத்துடன் சென்ற இவர் அரச்சலூர் நவரசம் மெட்ரிக் பாடசாலையில் சென்ற வருடம் உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்தி மருத்துவ கல்விக்கு தெரிவானார்.
இருப்பினும் இந்திய மருத்துவ சபையின் சட்டத்திட்டபடி அகதியாக வருபவர்கள் மருத்துவ கல்வி கறக்க முடியாது. என்பதனால் பொறியியல் கல்வியை கறக்க முடியுமென கூறப்பட்டது. ஆனால் அதற்கு நந்தினி மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில் இலங்கையை சேர்ந்த தனியார் அறக்கட்டளை நந்தினியின் நிலைமையை இணைய தளம் மூலம் அறிந்து கொண்டு. அவர்களை குடும்பத்துடன் இலங்கைக்கு திருப்பி அழைத்தனர்.
அதனை தொடர்ந்து சீனா நாட்டில் சென்னியாங் நகரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் குறித்த நிறுவனத்தின் உதவியுடன் மருத்துவ கல்வியை கற்று வருகின்றார்.
தொடர்புடைய செய்தி
அதிக மதிப்பெண் எடுத்தும் இலங்கை அகதி மாணவிக்கு மருத்துவம் படிக்க அனுமதி மறுப்பு !