மருத்துவமனை ஊழியர்களை மிரட்டி, தாக்க முயன்ற ஈழ அகதி கைது

இந்தியாவின் திருமங்கலத்தில் அரச மருத்துவமனையில் புகுந்து ஊழியர்களை மிரட்டி தாக்க முயன்ற, இலங்கை அகதியை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

திருமங்கலம் அருகே உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (32). இவரது மனைவி செல்வராணி (26). கடந்த 2ம் திகதி கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் செல்வராணி காயமடைந்தார்.

பின்னர் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செல்வராணியை நேற்று முன்தினம் பார்க்க ஸ்டீபன் சென்றுள்ளார்.

அங்கு மீண்டும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அவரை தடுக்க முயன்றுள்ளனர்.

அவர்களை கடுமையாக மிரட்டி தாக்க ஸ்டீபன் முயன்றார். இதுகுறித்து மருத்துவமனை டாக்டர் திருஞானசுந்தரம் சிகிச்சையில் பெண்னை தாக்கியதுடன், ஊழியர்களை பணி செய்ய விடாமல் மிரட்டியதாக பொலிசில் புகார் செய்தார்.

இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார் ஸ்டீபனை கைதுசெய்துள்ளதாக, தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

Related Posts