திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து, இன்று (செவ்வாய்கிழமை) சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் சுஜித்தின் உடல் பாத்திமா புதூர் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
82 மணிநேர மீட்புப்பணிக்கு பின், குழந்தை சுஜித்தின் உடல் செவ்வாய்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டது
உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சுஜித்தின் சடலம் கொண்டு செல்லப்பட்டது.
காலை சுமார் 7 மணியளவில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்ட சுஜித்தின் உடல், 8.15 மணி அளவில் நடுக்காட்டுப்பட்டிஅருகில் உள்ள பாத்திமா புதூர் கல்லறையில் சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடும் முயற்சிகளுக்கு பின்னரும் ஆழ்துறை கிணற்றில் விழுந்த சுஜித்தை உயிருடன் மீட்க முடியாமல் போய்விட்டதே என்று சுஜித்தின் குடும்பத்தினரும், உறவினர்களும், கிராம மக்களும் பெருங்கவலை அடைந்துள்ளனர்.
முன்னதாக, இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் சுஜித்தின் உடல் அவர் விழுந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டது.
சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனால் சுஜித்தை உயிருடன் மீட்க 82 மணிநேரமாக நடந்த மீட்பு பணி தோல்வியில் முடிந்தது,