மருத்துவபீடத்திற்குரிய கருவள சிகிச்சை நிலையம் புதிய இடத்தில் ஆரம்பம் !

சிவபூமி அறக்கட்டளையின் அனுசரணையுடன் யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடம் இணைந்து உருவாக்கிய பெண்கள் சுகநல நிலையத்தில் யாழ் மருத்துவபீடத்திற்குரிய கருவள சிகிச்சையகமானது (24.04.2024 ) நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வளவு காலமும் யாழ்.போதனா வைத்தியசாலையிலே நடைபெற்றுக்கொண்டிருந்த கருவள சிகிச்சையகமானது நேற்று முதல் இல 61 முதலாம் ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம். எனும் இடத்தில் அமைந்துள்ள பெண்கள் சுக நல நிலையத்தில் நடைபெறும் எனவும் யாழ்.மருத்துவபீட கருவள சிகிச்சை கிளினிக்கானது ஒவ்வொரு புதன்கிழமையும் பிற்பகல் 2.00 தொடக்கம் 4.00 மணிவரை இங்கு நடைபெறும் எனவும் வைத்திய நிபுணர் ரகுராம் தெரிவித்துள்ளார்.

சிவபூமி அறக்கட்டளை, யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவபீடம் இணைந்து உருவாக்கியுள்ள பெண்கள் சுகநல நிலையம் 21.04.2024  திறந்து வைக்கப்பட்டிருந்தது. பெண்கள் சுகநல நிலையம் இயங்குவதற்கு இலவசமாக மிகப்பெறுமதி வாய்ந்த இல்லத்தை வைத்திய நிபுணர் அ.பாலசுப்பிரமணியம் சாவித்திரிதேவி (அவுஸ்ரேலியா) தம்பதிகள் நன்கொடையாக சிவபூமிக்கு வழங்கியிருந்தனர்.

Related Posts