மருத்துவத்துறையின் அவலங்களை தட்டிக்கேட்கும் விஜய்!

தமிழ் சினிமாவில் மருத்துவத்துறையின் அவலங்களை வெளிச்சம் போட்ட படங்களில் விஜயகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ரமணா முக்கியமான படமாக இருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61வது படத்திலும் மருத்துவத்துறையின் அவலங்களை தட்டிக் கேட்கிறாராம் விஜய்.

இந்த படத்தில் அப்பா விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுவதுமாக படமாக்கி விட்ட அட்லி, தற்போது இரண்டு மகன் விஜய்களின் காட்சிகளை படமாக்கி வருகிறார். அதில் ஒரு விஜய் டாக்டர் வேடத்தில் நடிக்கிறார். அதே மருத்துவமனையில் இன்னொரு டாக்டராக காஜல் அகர்வாலும் நடிக்கிறார். ஆரம்பத்தில் அவர்கள் சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகளை படமாக்கிய அட்லி, அடுத்தபடியாக தான் வேலை செய்யும் மருத்துவமனையில் நடக்கும் சில சீக்ரெட் விசயங்களைக்கண்டு விஜய் கொதித்தெழும் காட்சிகளை படமாக்கப்போகிறாராம்.

அந்த மருத்துவத்துறையின் அவலங்களை வெளிச்சம் போட்டு, மக்களை எப்படி காப்பாற்றுகிறார் விஜய் என்பது போன்ற அதிரடியான காட்சிகள் டாக்டர் விஜய் கேரக்டரில் இடம்பெறுகிறதாம். அந்த வகையில், கத்தி படத்தில் விவசாயிகளுக்காக போராடிய விஜய், இந்த 61வது படத்தில் நோயாளிகளுக்காக போராடுகிறாராம்.

Related Posts