‘மரபுவழித் தாயகம்-சுயநிர்ணயம்-தமிழ் தேசியம்’: தமிழினத்தின் பேரெழுச்சியில் மீண்டும் பிரகடனம்!

வடக்கு கிழக்குத் தாயகம் முழுவதுமாக ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி நேற்றையதினம் பொலிகண்டியில் பேரெழுச்சியுடன் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் பேரணியின் நிறைவில் வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களால் பிரகடனம் வாசிக்கப்பட்டது.

குறித்த பிரகடனத்தில், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்டதும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றதுமான இனவழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழினத்தின் இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ச்சியாக ஜனநாயக வழியில் போராடுவோம் என உறுதி எடுக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் முதல் பொலிகண்டி பேரெழுச்சியில் வலியுறுத்தப்படுவன வருமாறு,



Related Posts