மரதன், சைக்கிள் போட்டியில் இராணுவம் உட்பட ஐவர் படுகாயம்

accidentமரதன் ஓட்டம் மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டிகளின் போது இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி இரு இராணுவ சிப்பாய் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த ஐவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பொலிஸாரும், 512 வது படைப்பிரிவினரும் இணைந்து நடாத்தும் புதுவருட விளையாட்டு விழா யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.

இதன் போது, மரதன் மற்றும் சைக்கிள் ஓட்ட வீரர்கள் தண்ணீர் தாங்கி மற்றும் சைக்கிள்களுடன் மோதியதில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில், 512 வது படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ சிப்பாயான சமிந்த குமார ( வயது 30) என்பவரும், பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த இராசசையா றீகன் (வயது 27) மற்றும் துரைராஜா ரஜீவ் (வயது 31) நல்லூர் பகுதியைச் சேர்ந்த எஸ். தனுராஜ் (வயது 18) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Related Posts