போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களுக்கான தண்டனையில் மாற்றம் இல்லை என நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். எனினும் உள்ளுர் சட்டப்படி மூன்று இலங்கை மீனவர்களுக்கும் இன்னும் மரணதண்டனை தீர்ப்பு வழக்கில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.