மரண தண்டனையில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுடானிய பெண் மீது, சட்டவிரோதமான பயண ஆவணங்களை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
மரியம் இப்ராஹிம் என்னும் அந்தப் பெண் இன்னமும் தலைநகர் கார்ட்டூமில் உள்ள போலிஸ் நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தெற்கு சுடான் தூதரகத்தால் அவசரக் கடவுச் சீட்டு வழங்கப்பட்ட மரியமுக்கு அமெரிக்காவினால், விசா வழங்கப்பட்டிருந்தது.
தெற்கு சுடான் மற்றும் அமெரிக்காவின் தூதர்கள் சுடானின் வெளியுறவு அமைச்சுக்கு வருமாறு பணிக்கப்பட்டுள்ளார்கள்.
மரியத்தின் கணவர் தெற்கு சுடானைச் சேர்ந்தவர், அவருக்கு இப்போது அமெரிக்க குடியுரிமை கிடைத்துள்ளது.
இஸ்லாத்தை நிராகரித்ததற்காக மரியம் இப்ராஹிமுக்கு கடந்த மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.