ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டமைக்கு இணங்க மரண தண்டனை நிறைவேற்றல் தீர்மானத்தை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
விரைவில் நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றம் அமுலுக்கு வரப்போகிறது என்ற தகவல்கள் வெளியான நிலையிலேயே இந்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையின்பேரில் 102 நாடுகள் மரண தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்தியுள்ளன.
அண்மையில் பாப்பாண்டவரும் மரண தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்துமாறு கோரியிருந்தார் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்