மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 83 கைதிகளுக்கு அதனை ஆயுள் தண்டனையாக மாற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார்.
நீதி அமைச்சால் நியமிக்கப்பட்ட விசேட குழுவால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளது என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
இதன்படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 450 இற்கும் அதிகமான கைதிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் குறித்த குழு, இந்தத் தீர்மானத்தை எடுத்தனர் எனத் தெரியவந்துள்ளது.
எனவே, 83 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு நீதி அமைச்சால் ஜனாதிபதியிடம் யோசனை முன்வைக்கப்பட்டது.
இதற்கமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி கிடைத்துள்ளது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.