முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கவிருந்த மயில் மாளிகையின் நீச்சல் தடாகம் மண் இட்டு மூடப்பட்ட போது, அதற்குள் தங்கங்களும் பணமும் சேர்த்துப் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் விடயம் குறித்து விசாரணைகளை நடத்துமாறு, அம்மாளிகையின் உரிமையாளரான ஏ.எஸ்.பி.லியனகே, பொலிஸ்மா அதிபருக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி, தனது நற்பெயரைக் காக்குமாறு மயில் மாளிகையை, மஹிந்த ராஜபக்ஷவுக்கு பரிசளிக்கவிருந்த அம்மாளிகையின் உரிமையாளர், தனது கடிதத்தில் மேலும் கோரியுள்ளார்.
இவர் இந்தக் கடிதத்ததை, பொலிஸ் தலைமையகத்துக்குச் சென்று, நேரடியாகவே கையளித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நைஜீரியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக, ஏ.எஸ்.பி.லியனகே நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.