மயிலிட்டியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமக்கு அங்குகோயில் வழிபாடுகளில் கலந்து கொள்ள அனுமதி பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மயிலிட்டி மக்களின் கோரிக்கையை அடுத்து எதிர்வரும் 6 ம் திகதி மக்களை கோயில் வழிபாடுகளில் கலந்து கொள்ளச் செய்வதற்காக அமைச்சர் அவர்கள் நேரடியாக அழைத்துச் செல்லவுள்ளார்.
எனவே மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் எதிர்வரும் ஆறாம் திகதி அங்கு செல்வதற்கான ஆயத்தங்களைச் மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் இந்த பகுதிக்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்ள ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா அறிவித்து மக்கள் வழிபடச் சென்ற நிலையில் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
ஆலய வழிபாட்டுக்காக சென்ற மக்களுக்கு அனுமதி மறுப்பு
மயிலிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு அனுமதி
தென்னிலங்கை மக்களுக்கு அனுமதி உண்டு என்றால் எமக்கு ஏன் இல்லை? – மயிலிட்டி மக்கள்