மம்மூட்டியின் கனவை நிறைவேற்றுவாரா ரஜினி?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலையாள நடிகர் மம்மூட்டி இணைந்து நடித்த தளபதி படம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் ஒன்று.

தற்போது நடிகர் மம்மூட்டி ஒரு பேட்டியில் பேசும்போது ரஜினியை இயக்குவது தான் தன்னுடைய வாழ்நாள் கனவு என கூறியுள்ளார்.

மேலும் பல வருடங்களுக்கு முன்பு ´பூதக்கண்ணாடி´ என்ற படத்தின் கதையை ரஜினியிடம் கூறியதாகவும், ஆனால் ரஜினி அதில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்றும், அதனால் அவரை மேலும் வற்புறுத்தாமல் நானே நடித்துவிட்டேன் எனவும் கூறியுள்ளார்.

ரஜினியை இயக்கவேண்டும் என்ற கனவு பல முன்னணி இயக்குனர்களுக்கே இன்னும் நிறைவேறாத நிலையில், மம்மூட்டியின் இந்த ஆசையை ரஜினி நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts