குழந்தையில் அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டும் விளம்பரத்திற்கு தடை விதித்த பேஸ்புக் நிறுவனம் தற்போது மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்காவில் வசித்து வருபவர் கெவின் பாண்ட். இவருக்கு ஹட்சன் பாண்ட் என்ற 2 மாதக் கைக்குழந்தை உள்ளது. இந்தக் குழந்தைக்கு இதயத்தில் இயல்புக்கு மாறாக சதை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்தக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. குறித்த அறுவை சிகிச்சைக்கு 75,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.45 லட்சம்) தேவைப்பட்டது.
அந்த அளவுக்குத் தங்களுக்கு வசதியில்லாத காரணத்தால், அந்தக் குழந்தையின் பெற்றோர் பேஸ்புக்கில் குழந்தையின் படத்தையும் அறுவை சிகிச்சை தொடர்பான விளம்பரத்தையும் பதிவு செய்தார்கள்.
ஆனால் அந்த விளம்பரத்தை பேஸ்புக் ஏற்க மறுத்துவிட்டது.
காரணம், குழந்தையின் படம் மிகவும் விகாரமானதாக இருக்கின்றது என்றும், விபத்து, இறப்பு, சிதைந்துபோன உடல்கள், பேய் போன்ற விகாரமான படங்கள் எதையும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று பேஸ்புக் தெரிவித்தது.
ஆனால் பின்னர், தனது தவறை உணர்ந்து பேஸ்புக் மன்னிப்புக் கேட்டதுடன். அந்த குழந்தையின் விளம்பரத்தை அனுமதித்துள்ளது. தற்போது குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக 30,000 டாலர்கள் சேர்ந்திருப்பதாக தெரிவித்தார். குழந்தையில் அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டும் விளம்பரத்திற்கு தடை விதித்த பேஸ்புக் நிறுவனம் தற்போது மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.