மன்னார் மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற கையெழுத்து வேட்டையில் வடமாகாணசபை அமைச்சரும் இணைந்தார்!.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்களுக்க சர்வதேச விசாரணை இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழுவினால் அறிவிக்கப்பட்ட கையெழுத்து திரட்டும் போராட்டம் வட,கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று 10-09-2015 வியாழன் காலை 10:30 மணியளவில் மன்னார் நகரத்தின் முன்றலில் தந்தை செல்வா சிலை அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற கையெழுத்து போராட்டத்தில் பெரும் திரளான மக்கள் தமது உரிமையை நிலைநாட்டும் மாபெரும் நோக்கோடு கலந்துகொண்டு கையெழுத்திட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இக் கையெழுத்திடும் போராட்டத்தினை மன்னார் பிரஜைகள் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்விற்கு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட் பணி.செபமாலை அவர்களும் வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்  தலைவர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் மற்றும் மன்னார் மாவட்ட அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts