மன்னாரில் மாணவர்களை கடத்த முயற்சிக்கும் மர்ம கும்பல்!! பொலிஸாரின் தீவிர பாதுகாப்பில் பாடசாலைகள்!!

மன்னாரில் பாடசாலைகளை பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை கடத்த ஒரு கும்பல் முயற்சிப்பதாக வெளியான தகவல்களின் அடிப்படையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாடசாலைகளுக்கு எதிரிலும் அதனை அண்டிய வீதிகளிலும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அண்மையில் வேன் ஒன்றில் சென்ற கும்பலொன்று உணவுப் பண்டமொன்றை வழங்கி இரண்டு மாணவர்களை கடத்திச் செல்ல முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்கள் கடத்தல்காரர்களிடமிருந்து மீண்டு கூச்சலிட்டதாகவும் இதனால் அவர்கள் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தின் பாடசாலைகள் மற்றும் அதனை அண்டிய வீதிகளில் பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Posts