படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு திங்கட்கிழமை (28) மாலை மன்னாரில் இடம் பெற்றது.
அதனைத்தொடர்ந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பும் குறித்த நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது கலந்து கொண்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மக்கள் சந்திப்பு இடம் பெற்றது.
இதன் போது கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.