மன்னாரில் இருந்து சர்வமத குழுவினர் கிளிநொச்சிக்கு விஜயம்!

மன்னாரில் இருந்து சர்வமத குழு ஒன்று நேற்றைய கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள சர்வமத தலைவர்களை சந்தித்ததோடு, மதஸ்தலங்களுக்கும் விஜயம் செய்தனர்.

மன்னார்-கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில்,இயக்குனர் எஸ்.அன்ரன் அடிகளாரின் ஒருங்கினைப்பில் மன்னாரில் இருந்து சர்வ மத தலைவர்கள் உள்ளடங்களாக குழு ஒன்று நேற்று (திங்கட்கிழமை) காலை மன்னாரில் இருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கு சென்றனர்.

மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் சமய நல்லிணக்க பிரிவின் ஊடாக உறவுப்பால நிகழ்வாக குறித்த விஜயம் அமைந்தது.

மன்னாரில் இருந்து விஜயம் செய்த சர்வமத குழுவினர் கிளிநொச்சி கறிற்றாஸ் அலுவலகத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.

அதனைத்தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சர்வமத மதஸ்தலங்களுக்கு குறித்த குழுவினர் விஜயம் செய்து மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி தமது விஜயம் குறித்து தெளிவுபடுத்தினர்.

Related Posts