மனோ கணேசன் கொழும்பு வாழ் தமிழர்களுக்கு துரோகம் செய்கின்றார் – டர்ஷன்

இன்றைய சூழ்நிலையில் சில அரசியல் கட்சிகள் பணத்துக்காக உறுப்பினர்களை கட்சியில் இணைத்து வேட்பாளர்களாக்கும் நிலையில் தமிழர் விடுதலை கூட்டணி சாதாரண சிவில் சமூகத்தவர்களையும் புத்தியீவிகளையும் வேட்பாளர்களாக நியமித்து தேர்தலில் போட்டியிடுகின்றது.

மனோ கணேசன் பண பலம் படைத்தவர்களை கட்சியில் இணைத்து அரசியல் வங்குரோத்து நிலையை சீர் செய்வதற்காக மக்களின் எதிர் காலத்தை விலை பேச முடியாது என்பதை இந்த வேளையில் தெரிவித்து கொள்கின்றேன்.

முதலில் கட்சியில் இருந்த படித்த ஒருவரை கட்சியில் இருந்து நீக்கி பண பலத்துக்காக இன்னொருவரை வேட்பாளராக நியமித்தது இவர் எமது கொழும்பு வாழ் தமிழர்களுக்கு செய்யும் துரோகம். என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கொழும்பு மாவட்ட தமிழர் விடுதலை கூட்டணி வேட்பாளர் நாகேந்திரன் டர்ஷன் தெரிவித்துள்ளார்.

எனவே மக்கள் இனியும் ஏமாறது இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ஒரு மாற்றத்தை ஏற்படுத்த தமிழர் விடுதலை கூட்டணிக்கு தமது ஏகோபித்த ஆதரவை வழங்க வேண்டும்.

அது மட்டுமல்ல நான் மனோ கணேசனிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றேன். அதாவது நீங்கள் உங்கள் கட்சியை விடுத்து இன்னொரு பெரும்பான்மை தேசிய கட்சியில் இணைந்து வாக்கு கேட்கும் போது உங்களால் முடியுமாயின் 3 ஆசனங்களை கோரி பெற்று இருக்கலாம். ஆனால் அது உங்களால் முடியாது. காரணம் பெரும்பான்மை கட்சியை சேர்ந்த தலைவருக்கு தெரியும் உங்களுக்கு 2 ஆசனங்களை வழங்குவதன் மூலம் 3அவது விருப்பு வாக்கை தான் சூறையாடலாம் என்பது.

ஆக மொத்தத்தில் நீங்கள் தமிழ் மக்களின் வாக்குகளை பேரின கட்சிக்கு தாரை வார்த்து கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளீர்களே ஒழிய தமிழ் மக்களின் விமோசனத்துக்காக பாடு படவில்லை என்பது தெட்ட தெளிவாக தெரிகின்றது.

எனவே மக்களே உசாராகுங்கள். இனியும் காலம் தாழ்த்தாது எதிர் கால மாற்றத்துக்காக உதய சூரியன் சின்னதுக்காக உங்கள் வாக்குகளை வழங்குங்கள் என தெரிவித்தார்.

Related Posts