மனோதத்துவர் பூத்ரியாக அசத்த வருகிறார் வடிவேலு!

தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்த வடிவேலு, இடையில் சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். பின்னர் தெனாலிராமன், எலி படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அந்தப்படங்கள் அவருக்கு வெற்றியை தரவில்லை. நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்து வந்த வடிவேலுவை எப்படியோ சம்மதிக்க வைத்து தனது ‛கத்திச்சண்டை’ படத்தில் நடிக்க வைத்துவிட்டார் விஷால்.

vadivel-vishal

சுராஜ் இயக்கும் இப்படத்தில் விஷால், வடிவேலு தவிர்த்து தமன்னா, சூரி, ஜெகபதிபாபு, ஜெய்பிரகாஷ், நிரோஷா உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். விஷால் நடித்த படங்களிலேயே அதிக பொருட்ச்செலவில் தயாராகி வருகிறது இந்தப்படம். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தீபாவளி ரேஸில் படம் களமிறங்குகிறது.

இந்நிலையில் ‛கத்திச்சண்டை’ படத்தின் ஸ்டில்கள் வெளியாகியிருக்கிறது. இதில், வடிவேலு வித்தியாசமான லுக்கில் வருகிறார். படத்தில் அவரது கேரக்டர் மனோதத்துவ டாக்டர் பூத்ரி. ஏற்கனவே பல கெட்-அப்புகளில் நடித்து அசத்திய வடிவேலுவிற்கு இந்தப்படமும் நிச்சயம் திருப்புமுனை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts