மனைவி இயக்கத்தில் நடிக்க மாட்டேன் – தனுஷ் அறிவிப்பு

தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் 3 என்ற படத்தில் நடித்தார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.

தற்போது ஐஸ்வர்யா வை ராஜா வை என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் கவுதம் கார்த்திக் நடிக்கிறார். மீண்டும் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என்று தனுஷ் கூறியிருக்கிறார்.

?????????????

இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஐஸ்வர்யா இயக்கும் படங்களை தயாரிப்பேன். நடிக்கும் உத்தேசம் இல்லை. தயாரிப்பதுதான் சவுகரியகமாக இருக்கிறது.

தற்போது சமிதாப் இந்திப் படத்தில் நடிக்கிறேன். ராஞ்சனாவில் கஷ்டப்பட்டு இந்தி பேசினேன். இந்தப் படத்தில் அந்த வாய்ப்பு இல்லை. காரணம் இதில் நான் வாய்பேச முடியாதவனாக நடிக்கிறேன்.

அமிதாப் பச்சன் சார் என்னை பிரேசில் கால்பந்து வீரரோடு ஒப்பிட்டு பேசினார். அதற்காகவே பிரேசில் அணி உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். என்றார் தனுஷ்.

Related Posts