மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்!

குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி மீது கணவன் கத்தி வெட்டு தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் சாவகச்சேரியில் பதிவாகியுள்ளது.

உதயசூரியன், கச்சாய் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், இராகுலன் சுகந்தி (வயது 30) என்ற பெண்ணே, தலையில் வெட்டுக்காயங்களுக்கு இலக்கான நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தப்பியோடிய கணவனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts