யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கங்களும், மகளீர் அபிவிருத்தி நிலையங்களும் இணைந்து மனையியல், அழகியல் பயிற்சி நெறிகளை வழங்கவுள்ளதாக பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.யூட் ஞாயிற்றுக்கிழமை (24) தெரிவித்தார்.
மூன்று மாதங்களைக் கொண்ட இந்தப் பயிற்சி நெறியில் 19 வயதிற்கும் 33 வயதிற்கும் இடைப்பட்ட, 9 ஆம் ஆண்டுகளுக்கு மேல் கல்வி கற்றவர்கள் பங்குபற்ற முடியும்.
பயற்சியின் போது, தினமும் 100 ரூபா வழங்கப்படும். மேலும் பயிற்சியின் முடிவில் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பயிற்சி நெறியில் இணைய விரும்புவர்கள் இம்மாத இறுதிக்குள் பிரதேச செயலகத்திற்கு வந்து, தொடர்பு கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.