மனித உரிமை மீறல் தொடர்பில் செய்திமடல்

news2014ல் இருந்து சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியத்தின் (LST) முரண்பாட்டின் போதான மனித உரிமைகள் நிகழ்ச்சித் திட்டத்தினால் (HRIC) இலங்கையில் போர் நடந்த பகுதிகளில் நிலவுகின்ற மனித உரிமைகள் நிலைப்பாடு பற்றி காலாண்டு (மூன்று மாதத்திற்கு ஒருமுறை) செய்திமடலை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்..

இந்த செய்திமடலின் மூலமாக தெற்கு மற்றும் வடக்கு சமூகங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏறபடுத்துவதே இந் நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.

முதன்மை ஊடகங்கள் மற்றும் அரச ஊடகங்கள் வடக்கில் நடக்கும் எந்த நிகழ்வுகளையும் வெளியிடாத தன்மை நிலவுவது மறுக்கவியலாத உண்மை.

மனித உரிமைகள் அமைப்பு என்ற வகையில் சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியமானது, திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டு வரும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய தேவைப்பாட்டினை அறிந்திருக்க வேண்டுமென்று நம்புகிறது.

எனவே இதற்காக வடக்கு-கிழக்கில் இடம் பெறுகின்ற மனித உரிமை மீறல் தொடர்பில் இச் செயற்திட்டத்தில் கட்டுரைகளை எழுத விரும்பின் (கருத்துகள், சம்பவ அறிக்கைகள், சூழ்நிலைகளின் மாற்ற நிலை – சாதகமான மற்றும் பாதகமான) அவற்றை எமது மின்னஞ்சல் அல்லது தொலைநகல் மூலம் எங்களுக்கு அனுப்பிவைக்கலாம்.(வார்த்தை எண்ணிக்கை 750 – 1000) கட்டுரைகள் எந்த மொழியிலும் சமர்ப்பிக்கலாம். தகவலின் உண்மை நிலை அறியப்பட்டு குறித்த ஆக்கம் பிரசுரிக்கப்படக்கூடியதா என்பதனை முரண்பாட்டின் போதான மனித உரிமைகள் நிகழ்ச்சித் திட்டம் (HRIC) தீர்மானிக்கும். பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள் தேவை
கு. ஐங்கரன்
சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியம்
3, கின்ஸி டெறர்ஸ் கொழும்பு 8
தொலைநகல் 0112 686 843
மின்னஞ்சல் kaingkaran@gmail.com

Related Posts