நாட்டில் நிலைமை பலவீனமாக உள்ளதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மனித உரிமைகளுக்கான பதில் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தண்டனையிலிருந்து விடுபடுவதை எதிர்த்துப் போராடுவதற்கான முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆழமான நிறுவன, ஜனநாயக மற்றும் பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்களை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியறுத்தியுள்ளார்.