மனித உரிமை இல்லத்தில் மனித உரிமைக் கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு பட்டச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிறீன்கிறாஸ் விருந்தினர் விடுதியில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது.
மனித உரிமை இல்லத்தினால் நடாத்தப்பட்ட மனித உரிமை டிப்புளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்த 24 மாணவர்களுக்கு இன்று பட்டம் வழங்கப்பட்டது. இக் கற்கை நெறியானது கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஆரம்பமாகி கடந்த மே மாதம் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.