துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நேரடி விசாரணை!!

மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக, யாழ்ப்பாணம் மாவட்ட மனித உரிமை ஆணையாளர் கனகராஜ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்று விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பா.சுதர்சனின் உறவினர்களிடமும், சம்பவத்தை நேரில் கண்ட சிலரிடமும் அவர்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மல்லாகம் சகாய மாதா ஆலயம் முன்பாக நேற்று இரவு இந்தச் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது. தற்போது அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts