கிளிநொச்சியை தலைமை அலுவலமாகக் கொண்டு இயங்கும் மனிதாபிமான புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கான தேசிய சங்கத்தின் புதிய அலுவலக கட்டம், திங்கட்கிழமை (23) திறந்து வைக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார, கல்வி, சுயதொழில் செய்வதற்காக உதவிகளை வழங்கிவரும் இந்த அமைப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களையும் வழங்கி வருகின்றது. போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அமைப்பு உதவி செய்து வருகின்றது.
சமூக ஆர்வலர்கள் இணைந்து இந்த அமைப்பை செயற்படுத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் செயற்பாடுகளை முன்னேற்றும் வகையில் வாடகை எதுவுமற்ற வகையில் தனது கட்டடமொன்றை கிளிநொச்சி மகா வித்தியாலத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை சி.சசிகலா என்பவர் வழங்கினார். இந்தக் கட்டடத்திலேயே இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழா நிகழ்வில் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு மெத்தைகள், உதவி உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டன. பல சமூக ஆர்வலர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.