மனிதர்களைப் போன்று வாயசைத்து செய்தி வாசிக்கும் ரோபோக்கள்

ஜப்பானிய டோக்கியோ அருங்காட்சியகத்தில் மனிதர்களை போன்று வாயை அசைத்து துல்லியமாக செய்தி வாசிக்கக் கூடிய இரு ரோபோக்கள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன

jappan-robot

கொடோ கீமாரொயிட் மற்றும் ஒடோனா ரொயிட் என பெயர் சூட்டப்பட்ட இந்த ரோபோக்கள் மனிதர்களைப் போன்ற இயல்பான முக உணர்வுகளை வெளிப்படுத்தி செய்திகளை வாசிக்கும் வல்லமையைக் கொண்டுள்ளன. மேற்படி ரோபோக்களை ஒஸ்கார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோபோ விஞ்ஞானியான ஹிறோஷி இஷிகுரோ வடிவமைத்துள்ளார்.

இந்த பெண் உருவான இரு ரோபோக்களும் சிலிக்கன் தோல் மற்றும் செய்கை தசைகள் என்பவற்றைக் கொண்டுள்ளன. அவை தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் செயற்படுத்தப்படுகின்றன.

Related Posts