மனிதத்தை இயற்கையை நேசிக்கும் நண்பர்களுக்கு மானிடம் அறக்கட்டளையின் வேண்டுகோள்!!

யாழ்.தெல்லிப்பளை மானிடம் இயற்கை வேளாண் பண்ணையில் முதலீடு செய்யுமாறு மானிடம் அறக்கட்டளை சார்பாக அன்புரிமையுடன் வேண்டுகின்றோம்.

பின்வரும் தெரிவுகளில் ஒன்றின் மூலம் நீங்கள் உதவலாம் .

  1. ரூ.ஒரு இலட்சத்துக்கு குறையாத முதலீடு ஒரு வருடத்தின் பின் பங்கு லாபம்
  2. ரூ.ஒரு இலட்சம் / 50,000 ஒரு / இரு வருடத்தில் மீளளிக்கும் தொகை
  3. வருடம் 25,000 அல்லது மாதாந்தம் 2500 செலுத்துவதன் மூலம் வாராந்தம் ‘இயற்கை மரக்கறி , காளான் மானிடம் உணவுப் பொருட்களை குறித்த அளவில் இல்லம் நாடி வரும் சேவை மூலம் பெற்றுக் கொள்ளல்
  4. மாதாந்தம் 100 ரூபா மற்றும் 10 மணி நேர உழைப்பை செலுத்தி மானிடம் இயற்கை வழி மரபுரிமை சங்கத்தில் அங்கத்துவம் பெறல்
  5. அறக்கொடையாக உங்கள் நிலங்களையோ /நிதிகளையோ வழங்கல்

மேற்படி தெரிவுகளில் உங்களால் முடிந்த தெரிவை/களை தெர்ந்தெடுத்து உதவுவதன் மூலம் கைக்குழந்தைகளுடன் வேலை செய்யும் பெண்கள், நாட்பட்ட நோயாளிகள் ஆகியோரின் வாழ்வில் ஒளியேற்றிய கைங்கரியத்தில் பங்கெடுப்பதோடு எம்மையும் எதிர்கால சந்ததியையும் புற்றுநோயிந்தும் சிறு நீரக மற்றும் தோற்றா நோய்களிலிருந்தும் இயன்றளவு பாதுகாக்க முடியும்

மேலதிக விபரங்களை தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அருகில் அமைந்துள்ள மானிடம் இயற்கைப் பண்ணையிலோ பொருளாளர் சிவானந்தன் ( 0778999822) மருத்துவர் நந்தகுமார் (O772208467)அல்லது மருத்துவர் பகீரதனை (0773498138 )தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்

– மானிடம் அறக்கட்டளை

maanidam-1

maanidam-2

maanidam-3

Related Posts