மந்திரவாதியின் ஆலோசனைக்கு அமைவாக செயற்படும் சுகாதார அமைச்சர்!!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ‘மந்திரவாதி மருத்துவரின்’ ஆலோசனைக்கு அமைவாக செயற்படும் சுகாதார அமைச்சரின் செயற்பாட்டினால் சர்வதேசத்தின் மத்தியில் எமது நாடு நகைப்பிற்குரியதாக மாறியுள்ளதென முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் மேலும் சிலரும் மதரீதியான சடங்கில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையிலேயே மங்கள சமரவீர தனது ருவிட்டர் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகின்றது. ஆனால், சுகாதார அமைச்சர் மோசமான ‘மந்திரவாதி மருத்துவரின்’ ஆலோசனைக்கு அமைவாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.

மேலும், விஞ்ஞானத்தை நம்புகின்ற பகுத்தறிவுள்ள ஒரு மனிதரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சர்வதேசத்தின் மத்தியில் எமது நாட்டை நகைப்பிற்குரியதாக மாற்றும் வகையிலான தனது அமைச்சர்களின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts