மத்திய வங்கியின் புதிய ஆளுநராக மீண்டும் தமிழர் ஒருவர் நியமனம்!

இலங்கை மத்திய வங்கி ஆளுநராக புதியவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.புதிய ஆளுநராக டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Indrajit Coomaraswamy

அனைத்து கட்சிகளினதும் ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இவர் பதவியை ஏற்றுக்கொள்ள உள்ளர்.

இலங்கையைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான இந்திரஜித் குமாரசுவாமி, பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான முன்னாள் பணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றிருந்தார்.

இதேவேளை,1973ஆம் ஆண்டு இவர் இலங்கை மத்திய வங்கியில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts