நாட்டினதும், மக்களினதும் அபிவிருத்திக்காக மத்திய அரசாங்கமும், மாகாண அரசாங்கமும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும் என வட. மாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர்,
புலம்பெயர் தமிழர்கள் இலங்கை மக்களுக்கு உதவிகளை செய்வதற்கு முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுகின்ற நிலையில், அவர்களின் ஒத்துழைப்பு அளப்பரியதாகும்.
அதேவேளை, மக்களது நலனுக்காக மட்டுமின்றி நாட்டினது அபிவிருத்திக்காகவும் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் இணைந்து செயற்படுவது அவசியமாகும்.
மத்திய- மாகாண அரசுகள் இரு வேறு துருவங்கள் போன்று செயற்பட்டு வந்தால் எம்மால் எதனையும் சாதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.