யாழ் இந்துக்கல்லூரி 125 ஆண்டு நிறைவு விழாக்கொண்டாட்டங்களை புறக்கணிக்க எடுத்த முடிவை மீளப்பெறுவதில்லை என பழையமாணவர்சங்கம் நேற்றைய (20) கூட்டத்தில் மீள உறுதி செய்துள்ளது. இதுபற்றி பழையமாணவர் சங்கத்தலைவர் சி.சுந்தரேஸ்வரன் அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,
ஈழத் தமிழர் வரலாற்றில் பல புகழ் பூத்த பழைய மாணவர்களைத் தந்த கல்லூரியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நிகழ்வில் கல்லூரியின் நலன் சாராத ஒருவரை – தமிழ்த் தேசியத்துக்கு ஒத்திசைவில்லாத ஒருவரை முதன்மைப் படுத்துவதைத் தவிர்க்குமாறு பழைய மாணவர் சங்கத்தினால் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அது தவிர கல்லூரியின் பழைய மாணவர்களான முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் ஒப்பமிட்டு அதிபரிடம் கோரிக்கை ஒன்றையும் விடுத்திருந்தனர். இவை எவற்றையும் கருத்தில் கொள்ளாமல், நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப் பட்டதையடுத்து நிகழ்வுகளைப் புறக்கணிப்பதென பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகக்குழு முடிவு செய்திருப்பதாக சங்கத்தின் தலைவர் சி.சுந்தரேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக எடுக்கப்பட்டிருந்த இந்த முடிவை ரங்காவை முன்னிலைப்படுத்துவதை தவிர்ப்பதற்கான அழுத்தமாக பிரயோகிக்கப்பட்டிருந்தபோதும் எந்தவித முன்னேற்றகரமான நடவடிக்கைககளும் போதுமான அளவிற்கு நிர்வாகத்தால் எடுக்கப்பட்டிருக்கவில்லை. விழா ஏற்பாடுகள் குறித்த பழைய மாணவர்சங்கத்தின் கருத்துக்களுக்கு உரிய முறையில் பதிலளிக்கப்பட்டிருக்கவும் இல்லை. முத்திரை வெளியீட்டில் முதன்மைப்படுத்தல் மற்றும் பெரும் எதிர்ப்புக்குள்ளான சர்சைக்குரிய இணைப்பாளர் பதவியின் ஊடாக , நிகழ்வில் வெளியிடப்படவுள்ள 125 வது ஆண்டு சிறப்பு மலரில் அவருடைய வாழ்த்துச்செய்தி வழங்கப்பட்டிருப்பதும் ரங்காவை முதன்மைப்படுத்துவதை மேலும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்த காரணத்தினால் பழையமாணவர் சங்க செயற்குழு குறித்த புறக்கணிப்பு முடிவை மீளப்பெற மறுத்துவிட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் முன்னணி தேசியப் பாடசாலைகளில் ஒன்றான யாழ். இந்துக்கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் எதிர்வரும் 23,24,25, 27ம் திகதிகளில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவிருக்கின்றது. 24ம்திகதி நிகழ்வில்
மத்திய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவம்சவும் 25ம்திகதி நிகழ்வில் பழையமாணவரும் முன்னாள் உப அதிபருமான கப்டன் சோமசுந்தரம் அவர்களும் , 27ம்திகதி நிகழ்வில் வட மாகாணசபை முதலமைச்சர் நீதிபதி விக்னேஸ்வரனும் பிரதம விருந்தினராக கலந்துகொள்கின்றனர். 24ம்திகதி மத்திய அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்வில் கொழும்பு பழைய பாணவர்சங்கத்தின் உபதலைவர்களில் ஒருவரும் விழா ஏற்பாட்டுக்குழு இணைப்பாளருமான சர்ச்சைக்குரிய சிறீரங்கா அவர்களுடைய ஒருங்கிணைப்பில் நினைவு முத்திரையும் வெளியிடப்பட ஏற்பாடாகியுள்ளது
இதனிடையே வடமாகாண முதலமைச்சர் அலுவலகம் முதலமைச்சர் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளும் நாள் அன்று பிரச்சனைகளை தவிர்க்கும் நோக்கில் ரங்காவின் பிரசன்னத்தினை தவிர்க்குமாறு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாக நம்பகரமான வட்டராங்களில் இருந்து அறிய முடிகின்றது.
இதேவேளை சங்கத்தின் முடிவுக்கு ஆதரவாக ரங்கா முதன்மைப்படுத்தப்படும் நிகழ்வு நாட்களில் பல்வேறு வழிமுறைகளில் எதிர்ப்பு போராட்டங்களை செய்யப்போவதாக பழையமாணவர்கள் தெரிவித்துள்ளனர். இணைப்பாளர் என்ற பெயரில் ரங்காவின் வாழ்த்துச்செய்தியுடன் மலர் வெளியிடப்படுவதை தாம் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்றும் குறித்த பக்கம் நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முனவைத்ததுள்ளனர் தவறின் குறித்த பக்கம் கிழித்தெறியும் போராட்டம் மேற்கொள்ளப்படும் என்றும் பழையமாணவர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய அமைச்சர் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளுகின்ற முத்திரை வெளியீட்டு நாள் ரங்கா எவ்வகையிலேனும் முதன்மைபெறும் பட்சத்தில் ரங்காவுக்கெதிரான போராட்டங்கள் அரங்கின் உள்ளேயும் வெளியேயும் நடைபெற உள்ளமை மத்திய அமைச்சருக்கும் சங்கடத்தினை ஏற்படுத்தலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பிந்திய செய்தி
பெரும் அழுத்தத்தின் மத்தியில் முத்திரை வெளியீட்டு விழா அழைப்பிதழில் ரங்காவின் பெயர் நீக்கப்பட்டிருக்கின்றதாகவும் ரங்கா மேடை ஏற மாட்டார் என்றும் தெரிய வருகின்றது.சிறப்பு மலரில் ரங்காவின் வாழ்த்துச்செய்தி இடம்பெறாமல் செய்வதற்கு பகீரத பிரயத்தனம் செய்யப்படுவதாக அறியவருகின்றது
தொடர்புடைய செய்திகள்
யாழ் இந்துக்கல்லூரி 125ம் ஆண்டு இறுதி விழாவை பழையமாணவர் சங்கம் புறக்கணித்தது
யாழ் இந்துக்கல்லூரியின் 125 வருட நிறைவும் ரங்காவின் பிரசன்னமும்!