மத்திய அரசும் வடக்கு அரசும் இணைந்து செயற்படவேண்டும் – தவராசா

thavarasaமாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இணைத்தலைமை (டக்ளஸ் தேவானந்தா – சி.வி.விக்னேஸ்வரன்) ஏற்படுத்தப்பட்டது போல மத்திய அரசும் வடக்கு அரசும் இணைந்து செயற்படவேண்டும் என நான் எண்ணுகின்றேன் என்று வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா தனது கன்னியுரையில் தெரிவித்தார்.

வடமாகாண முதலமைச்சரினை இங்குள்ளவர்கள் தவறான வழிகளில் இட்டுச் செல்கின்றனர். அவரது செயற்பாடுகளை குழப்புகின்றனர் என்று தெரிவித்தார்.

மேலும் வடமாகாண சபையில் உள்ளதை ஒழுங்காக செய்த பின்னர் தொடர்ந்து இல்லாது பற்றி கதைப்போம். அதற்கு நாங்களும் ஆதரவு தருவோம். 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்கள் உள்ளிட்டவை பெற்றுக்கொள்வது தொடர்பில் எதிர்க்கட்சியினராகிய நாங்களும் ஆதரவு தருவோம். வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி நிர்வாக மொழியாக இருக்கின்ற போதும், வடமாகாண சபையில் இருந்து செல்கின்ற கடிதங்கள் ஆங்கிலத்திலேயே செல்கின்றன.

ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் தறுதலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருந்தார். அது தவறானது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் தொண்டர் ஆசிரியர்களை அவர்களின் தகைமைக்கேற்பவே நியமித்தோம் என்றார்.

இதன்போது, குறுக்கிட்ட சிவாஜிலிங்கம் ஏன் அதனை தொண்டர் ஆசிரியர்கள் மட்டும் என்று சொல்கின்றீர்கள்? ஏனைய ஆசிரியர்கள் நியமனங்களிலும் அவ்வாறான நியமனங்கள் அமையப்பெற்றன என்றார்.

தொடர்புடைய செய்திகள்

தகுதியற்ற எவரையும் ஆசிரியர் பதவிக்கு நியமிக்க முடியாது – கல்வி அமைச்சர்

தகைமையற்ற தறுதலைகளை ஆசிரியர்களாக்குவதைக் தவிர்ப்போமாக – முதலமைச்சர்

Related Posts