மத்திய அரசுக்கு விட்டுக்கொடுக்காமல் சுற்றுச்சூழல் அமைச்சராக தொழிற்பட்டமை தவறு -விசாரணைக்குழு தெரிவிப்பு

வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சுகிர்தன் , சர்வேஸ்வரன், லிங்கநாதன் ,  அனந்தி ஆகியோரினாலும் மேலும் சிலராலும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிக்க முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு வெளியிட்ட விசாரணை அறிக்கை உறுப்பினர்களுக்கு கடந்த புதன்கிழமை வழங்கப்பட்டுள்ள நிலையில் அறிக்கையின் முக்கிய விடயங்கள்  தெரியவந்துள்ளது.

குற்றச்சாட்டுக்களை  சபையிலும் விசாரணைக்குழுவுக்கும் எழுத்து மூலம் சமர்ப்பித்த மாகாணசபை உறுப்பினர்களில் சுகிர்தனும்,  அனந்தியும் விசாரணைக்கு சமூகமளித்து சாட்சி சொல்லாமல் தவிர்த்திருந்தனர். இதனால் அவர்களால் அமச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் விசாரணைக்குழு பரிந்துரை எதுவும் வழங்க முடிந்திருக்கவில்லை.

விசாரணையின்போது லிங்கநாதன் சார்பில் ஈபிடிபி உறுப்பினரும் எதிர்க்கட்சித்தலைவருமான தவராசா முன்னிலையாகி அமச்சர்களை  குறுக்கு விசாரணை செய்திருந்திருக்கிறார்.

இவ்வறிக்கையில் சுற்றுச்சூழல் அமைச்சராக  தொழிற்பட்டு மத்திய அரசுக்கு உட்டபட்ட விடயங்களை தனது அமைச்சு ஊடாக கையாள முற்பட்டமை   தவறு என்று கூறியிருக்கின்றது.

விவசாய அமச்சருக்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது அவற்றில் எதிலும் நிதி மோசடிகளை விசாரணைக்கு  அடையாளப்படுத்த முடிந்திருக்கவில்லை. இருந்தபோதிலும் பல ஊடகங்கள் செய்திகளை திரித்து கோடிக்கணக்கில் கையாடப்பட்டதாக செய்திகளை வெளியிட்டுவருகின்றன.  பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் நடத்தைகள் சம்பந்தப்பட்டு அவற்றின் தமது சந்தேகங்களை சாட்சிகளின் அடி்படையில்  குற்றமாக கருதுவதாக விசாரணைக்குழு குறிப்பிட்டிக்கின்றது.

இது தொடர்பில் அமைச்சருடன் தொடர்பு கொண்டு கேட்ட வேளை தனது தன்னிலை விளக்கத்தை வடக்கு மாகாணசபையில் எதிர்வரும் 14 ம் திகதி சமர்ப்பித்த பின்னரே தன்னால் முழுமையான விளக்கத்தை ஊடகங்களுக்கு வழங்க முடியும் என்று குறிப்பிட்டார். அத்துடன் தான் எந்தவிதமான நிதிக்கையாடலோ நிதிமோசடியோ செய்திருக்கவில்லை என்றும் தெரிவித்தார் .மாகாணத்தின் நலனுக்காக செயற்பட்டமை அதிகார வரம்புகளை அதற்காக மீறியமை விடயங்களில்   சபையோ முதலமைச்சரோ தன்னை குற்றவாளியாக முடிவு செய்தால் தான் பதவி விலகத்தயார் எனினும் தன்மீதான மோசடி குற்றங்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

விசாரணைக்குழு  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது

இவ்வாறே மூங்கில் வளர்ப்பு நடவடிக்கையில் முதலீடு செய்ய முற்றபட்டவர்களுக்கு மூங்கிலை எரித்து அதன் மூலம் அனல் மின் பெறுவதற்கு மறுப்பு தெரிவித்தமை மற்றும்   அப்படி சுழலுக்கு பாதிப்பு ஏற்படும் திட்டங்களுக்கு பாதுகாப்பு நன்கொடை யினை மகாணசபை சுழல் பாதுகாப்பு  நிதிக்கு வழங்கவேண்டும் என்ற நிபந்தனை விதித்தமையினை கூட விசாரணைக்குழு விமர்சித்துள்ளது. இது பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் நலனை கருத்தில் கொள்ளாது விசாரணைக்குழு தொழிற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள்  குறிப்பிடுகின்றனர்

மாகாண அமைச்சினால் தடுக்கப்பட்ட திட்டங்களை ஆளுனரின்  சிறப்பு  அனுமதியுடன் முதலீட்டாளர்  மேற்கொண்டு அவ்விழாவுக்கு அமைச்சரை விருந்தினராக அழைத்த போது அவர் செல்லாததையும் சந்தேகப்படுவதாக கூறியிருக்கின்றது.

தனது அமைச்சின் கீழ் வரும் முதலீட்டு  விடயங்கள் அனைத்தும் அதிகாரிகளால் அமைச்சருக்கு தெரியப்படுத்தபே்படவேண்டும் என்று  உத்தரவிட்டதைக்கூட அதிகாரத்துஸ்பிரயோக என குறிப்பிட்டுளள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதைக்கூட  அறிக்கை ”களியாட்டமாக” சித்தரித்துள்ளது

அதேவேளை அறிக்கையின் எந்த இடத்திலும் நிதிமோசடி தொடர்பில் சாட்சிகளையோ ஆவணங்களையோ  விசாரணைக்குழுவால் நிரூபிக்க முடியவில்லை என்பதை குழு ஒத்துக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

 

நிதிமோசடி தொடர்பில் தனது சந்தேகத்தை மட்டும் விட்டுச்சென்றுள்ள விசாரணைக்குழு
அதிகார வரம்புகளை மீறியதற்காகவும், நியமனங்களுக்கு சிபார்சு வழங்கியமைக்காகவும் ,திறனற்ற  மோசடி செய்த கூட்டுறவு சங்க அதிகாரிகளை மீது  தனது அழுத்தத்தின் மூலம் பதவிநீக்கம் செய்தமைக்காகவும்  அதிகார துஸ்பிரயோகம் செய்ததாக கூறி,  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய விழாக்களை நடாத்தியமை களியாட்டம் அவை வீண்செலவுஎன்று கூறியும், சுற்றுச்சூழல் தொடர்பில் காரணங்கள் கூறி வெளிநாட்டு முதலீடுகளை தவிர்த்தமை உள்நோக்கம் கொண்டவை என்று கூறியும் அமைச்சர் விலக்கப்படவேண்டும் என  பரிந்துரை செய்திருக்கின்றது.

அத்துடன் கல்வி அமைச்சரையும் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக நீக்குமாறு பரிந்துரை செய்துள்ளது. முதல்வர் இல்லாத சந்தர்ப்பங்களில் இவ்விரு அமைச்சர்களுக்குமே பதில் முதல்வர்  பதவி வழங்கப்பட்டு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

இது தொடர்பில் அமைச்சர்கள் தன்னிலை விளக்கம் அளிக்கவும் விவாதம் செய்யவும் வருகின்ற 14ம் திகதி  சிறப்பு அமர்வு கூட்டப்படுகின்றது. அதனபின் முதல்வர்  இது தொடர்பில் முடிவு எடுப்பார் என தெரியவருகின்றது.

வடக்கு மாகாணசபையின் ஆளும் கட்சியான கூட்டமைப்பு வட்டாரங்கள் பொறுப்பை முதல்வரிடமே விட்டிருப்பதாகவும் அவரின் முடிவே இறுதியாக இருக்கவேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிய வருகின்றது

Related Posts