மது அருந்தும் காட்சியில் நடித்தது ஏன்? ஹன்சிகா விளக்கம்

ஹன்சிகா நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் போகன். இதில் ஹன்சிகாவின் அறிமுக காட்சியே டாஸ்மாக் கடையில் தான் துவங்கும்.

கும்பலில் முண்டியடித்துக் கொண்டு 90 ரூபாய் சரக்கு வாங்கும் ஹன்சிகா நேராக தனது தோழியின் அறைக்கு சென்று ராவாக அதை குடிப்பார்.

தனக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கும் மிலிட்டரி அப்பாவை மிரட்ட வேண்டும் என்பதற்காக குடிப்பார். குடித்து விட்டு போதையில் தள்ளாடியபடி ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டு செல்லும்போது போலீசிடம் மாட்டிக் கொள்வார்.

ஜெயம்ரவி அவரை காப்பாற்றி வீட்டுக்கு அழைத்துச் செல்வார். ஹன்சிகாவுக்கு அவரது அப்பா பார்த்திருக்கும் மாப்பிள்ளையே ஜெயம் ரவி தான். இப்படி அமையும் அந்தக்காட்சி.

இதில், ஹன்சிகா முதன்முறையாக மது குடிக்கும் காட்சியில் நடித்திருப்பது சிறிது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஹன்சிகா கூறியிருப்பதாவது: ‛‛என் கேரியரில் மது குடிப்பது போன்று நடித்திருப்பது இதுதான் முதல் முறை. இதற்கு முன்பு ஒரு சில படங்களில் நடிக்க சொன்னபோது மறுத்திருக்கிறேன். இந்த படத்திற் நடித்ததற்கு காரணம்….

அந்த கேரக்டருக்கு அந்த காட்சி தேவையாக இருந்தது, படத்தை பார்த்தால் புரியும். காதலித்து தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கொள்கையில் இருக்கும் எனக்கு அப்பா அம்மா பார்த்த மாப்பிள்ளையான ஜெயம் ரவியை பிடிக்க வேண்டும், அதற்குத்தான் அந்த காட்சி.

மேலும் குடிபழக்கம் உள்ள பெண்ணாக நடிக்கவில்லை, எதுவும் தெரியாமல் ஒரு அசட்டு தைரியத்தில் குடிக்கும் விளையாட்டு பெண்ணாகத்தான் நடித்திருக்கிறேன்.

மது அருந்துவதை அதுவும் குறிப்பாக பெண்கள் மது அருந்துவதை நான் முழுமையாக வெறுக்கிறேன்” என்கிறார் ஹன்சிகா.

Related Posts