மதுர மைக்கேலாக வைரலாகும் சிம்புவின் புதிய தோற்றம்

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தைத் தொடர்ந்து சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்து வருகிறார்.

Simbu

3 கெட்டப்புகளில் சிம்பு நடிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவுக்கு வந்தது.இந்நிலையில் சிம்புவின் புதிய புகைப்படமொன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மதுர மைக்கேல் என்ற பெயரில் வெளியான சிம்புவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிம்பு ரசிகர்களும் இந்த புதிய தோற்றம் தங்களைக் கவர்ந்துள்ளதாக சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இப்படத்தில் இளமையான சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி அவர் முடியாதென்று மறுத்ததாக கூறப்படுகிறது.

படத்தில் இடம்பெறும் சிம்புவின் மற்ற 2 தோற்றங்களை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. விரைவில் இப்படத்தின் 2 வது கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts