மதுரையில் பழ.நெடுமாறன் கைது!

மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மதுரையில் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருக்க முயன்ற உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் திடீரென கைது செய்யப்பட்டார்.

pala-nadumaran

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

மதுரை சட்டக்கல்லூரியை சேர்ந்த நந்தினி என்ற பெண் மதுவிலக்கை அமல்படுத்த கோரி கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்.

இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுவிலக்கை அமல்படுத்த கோரி சட்டக்கல்லூரி மாணவி மற்றும் அவரது தந்தை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இன்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்து பழநெடுமாறன் உட்பட 7 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுப்பட்ட பழநெடுமாறன் உட்பட 9 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த மதுரையை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி நந்தினி சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

ஆனாலும், தொடர்ந்து தனது போராட்டத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று உண்ணாவிரதம் மேற்கொண்ட அனைவரும் அனுமதியின்றி பேராட்டத்தில் ஈடுபட முயன்றதால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

Related Posts