மதுரைக்கு அவசியம் வரணும் ப்ரோ..! நடிகர்களை அழைக்கும் விஜய்!

இன்றைய சினிமாவில் கதைக்கு பஞ்சம் இருகிறதோ இல்லையோ பிரபல ஹீரோக்களுக்கு பட்ட பெயர் வைப்பதில் அதிக பஞ்சம்.சமீபத்தில் வாரஇதழ் நடத்திய சர்வேயில் அடுத்த சூப்பர்ஸ்டார் இளையதளபதி விஜய் தான் என்று முடிவு அறிவிக்கப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டு வந்தன.

vijay011

இந்நிலையில் தற்போது மதுரையில் இந்த சூப்பர் ஸ்டார் பட்டதை தாரைவார்க்க பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றை தயார் செய்து உள்ளது இந்த வாரஇதழ்.

பல இளம் நடிகர்கள் முன்னிலையில் சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி விஜய்யை வைத்து பல படங்கள் தந்த செல்வாபாரதி மூலம் நடிகர் நடிகைகளை மதுரைக்கு அழைத்து வரும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் விஜய்., ஆனால் சில நடிகர்கள் அப்படி இப்படி சொல்ல, களத்தில் விஜய்யே இறங்கினாராம்.

தன் பி.ஆர்.ஓ.வின் செல்போனில் இருந்தே அவர்களுக்கு போன் போட்டு பேசுகிறாராம். மதுரைக்கு அவசியம் வரணும் ப்ரோ..! என்று அன்புடன் அழைப்பு விடுக்கிறாராம். விஜய்யின் போன் அழைப்பைக் கேட்டு வளரும் நடிகர்கள் பதிலுக்கு கண்டிப்பா ப்ரோ என்று உறுதி செய்து செய்தனராம்.

Related Posts